×

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா மீது 3,991 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், சித்தரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாசாமி. கன்னட சினிமா நடிகர் தர்ஷினின் தீவிர ரசிகர். இவர் சமூக வலைதளங்களில் நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ராகவுடா ஆகியோர் கூட்டாளிகள் சேர்ந்து ரேணுகா சுவாமியைகடத்தி கொலை செய்தனர்.

இந்த வழக்கில் தர்ஷன் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்து செய்யப்பட்டனர். இந்நிலையில் பெங்களூரு 24வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 17 பேர் மீது 3991 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

The post ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா மீது 3,991 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Darshan ,Pavitra ,Bengaluru ,Renukaswamy ,Chittadurga District, Karnataka ,Darshin ,Pavitra Gowda ,Pavithra Gowda ,
× RELATED கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்