×
Saravana Stores

திருவாரூர் அருகே பரபரப்பு குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 43 குவிண்டால் பருத்தி கொள்முதல்

 

வலங்கைமான், செப். 2: குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் 7 ஆயிரத்து 639க்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு, பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதில், குடவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் 5ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கரூர், ஈரோடு, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 வியபாரிகள் கலந்து கொண்டனர்.

பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7 ஆயிரத்து 639 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 809ரூபாய்க்கும் சராசரியாக ரூபாய் 7 ஆயிரத்து 107க்கும் ஏலம் போனது. பருத்தி மறைமுக ஏலத்தில் 43.31குவின்டால் பருத்தி 3லட்சத்து 9ஆயிரத்து 158 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டுவந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற் பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

The post திருவாரூர் அருகே பரபரப்பு குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 43 குவிண்டால் பருத்தி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Gudavasal regulation ,Tiruvarur ,Valangaiman ,Gudavasal Regulated Sale Hall ,Delta ,Kudavasal ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...