இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்

கொழும்பு: இலங்கையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம் கடந்த 28ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் நடந்த வைகாசி விசாகப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை துவங்கி இரவு வரை ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து கண்ணகி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...