துபாயில் 89.4 மணி நேரம் இடைவிடாமல் தொகுத்து வழங்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் தொகுப்பாளர்

துபாய் :  சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன்  தமிழ் 89.4 பண்பலை  சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

Advertising
Advertising

இதில்  தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல்  89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து  பண்பலை  நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சியின்  மூலம் 2 லட்சத்திற்கும் மேல் எழுது பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவர் செஞ்சிலுவை சங்கத்திட ஒப்படைக்கப்பட்டது . இவரின் சாதனை அங்கீகரித்து  ஆசிய சாதனைகள் புத்தகம் (Asia Book of Records) அவருக்கு சான்றிதழ் வழங்கியது. தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

89.4  தமிழ் எப் எம்  நிறுவனத்தின் இயக்குனர் சோனா ராம் , அவர்களின் துணைவியார்  சக்திராம், செயல்நடவடிக்கை மேலாளர் சூர்யா , அவரின் சகோதரர் ஆதித்யா , மற்றும்  நிறுவன விற்பனை மேலாளர், உயர் மட்ட அதிகாரிகள் , நிறுவன ஆர் ஜேக்கள் உள்ளிட்டோர்  ஆர் ஜே நிம்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: