கிராமத்து இளைஞனாக வரும் மாஸ்டர் மகேந்திரன், நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசிக்கலாம். ஆர்த்தி பொடிக்கும், அவருக்குமான காதல் இயல்பாக இருக்கிறது. ஆர்த்தி பொடி அழகிலும், னியின் காதலி காவ்யா அறிவுமணி நடிப்பிலும் ஸ்கோர் செய்கின்றனர். ஆர்த்தி பொடியை ஒருதலையாக காதலிக்கும் இளைஞர், அடிக்கடி ஜான் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். தம்பி மாதிரி பார்த்துக்கொண்டவன் செய்த துரோகத்தால் காதலியை இழந்து பேயாக மாறிய னி, நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தளபதி ரத்னத்தின் கேமரா, கிராமத்தின் பசுமையை குளுகுளுவென்று பதிவு செய்துள்ளது. திவாகரா தியாகராஜனின் இசை பரவாயில்லை ரகம். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் வைத்ததை இயக்குனர் நா.அருண் கார்த்திக் தவிர்த்திருக்கலாம்.
The post ரிப்பப்பரி – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.