×

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஆக.11ல் ரிலீஸ்

சென்னை: ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர் நடிக்கும் ‘அயலான்’ படத்தை இயக்குகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இதை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் அறிமுகமான இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் சரிதா, சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயரிட்டுள்ளனர். தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் ரிலீசான ‘மாவீரன்’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் தலைப்பு தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை என்று, படக்குழுஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஆக.11ல் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sivakarthikeyan ,CHENNAI ,R. Ravikumar ,Rahul Preet Singh ,Isha Gobikar ,Madon Ashwin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்