×

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

நெல்லை : காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் சிவகாசியை சேர்ந்த முருகன் மகள்கள் கல்லூரி மாணவி மேனகா (18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15) உள்பட சுமார் 25 பேர் ஒரு வேனில் சாமி தரிசனம் செய்ய இன்று சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகை தந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலுள்ள பட்டவராயன் கோவில் முன் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மேனகா மற்றும் சோலை ஈஸ்வரி ஆகிய இருவரும் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியுள்ளனர், இதைப்பார்த்த அவர்களது சித்தப்பா சங்கரேஸ்வரன் (40) மற்றும் மாரிஸ்வரன் (28) ஆகியோர் இருவரையும் மீட்க ஆற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது அவர்களும் ஆற்றில் மூடி நிலையில், அங்கிருந்தவர்கள் மாரிஸ்வரனை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அம்பை தீயணைப்பு துறையினர் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் சடலமாக மீட்டனர். தொடர்ந்து மூவர் உடலையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thamiraparani river ,Karaiyar Sorimuthu Ayyanar temple ,Nella ,Babanasam Western Mountain ,Ambai, Nella District ,Karaiyar Sorimuthu Ayyanar ,temple ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே காரையார் சொரிமுத்து...