- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- Ranipettai
- வேலூர்
- Tirupathur
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- சேலம்
- ஈரோடு
- நாமக்கல்
- நீலகிரி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனியில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு உளது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஆக.19-ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.