சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்; நிதி ஒதுக்கீடு குறைப்பை ஏற்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டில் முடிக்கவேண்டும். ரயில்வே பணிகளை 5 ஆண்டுகளில் முடிக்க சிறப்புத் திட்டம் வகுத்து, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்வண்டித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்; நிதி ஒதுக்கீடு குறைப்பை ஏற்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.