நாகை: நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எகனாமி பிரிவில் ரூ.5,000 கட்டணமும், பிரீமியம் எகனாமி பிரிவில் செல்ல ரூ.7,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை 10 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கப்பல் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகை வந்தடையும். நாகை-இலங்கை பயணிகள் கப்பலின் வழக்கமான சேவை ஆக. 18 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.18 முதல் நாகையில் காலை 8 மணிக்கு கப்பல் புறப்பட்டு பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். ஆக.18 முதல் இலங்கையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு கப்பல் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை வந்தடையும். இலங்கைக்கு கப்பலில் பயணம் செய்ய www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
The post நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5,000 கட்டணம் நிர்ணயம் appeared first on Dinakaran.