×

பைக் மோதி விவசாயி பலி

திருத்தணி, ஆக. 15: திருவாலங்காடு அருகே நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசக்(60) விவசாயி. இவர் கிராமத்திற்கு அருகில் சாலையோரத்தில் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வேகமாக சென்ற நபர் முதியவர் மீது மோதி விட்டு வேகமாக சென்று விட்டார். இதில், படுகாயமடைந்த முதியவர் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய பைக் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

The post பைக் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Isaac ,Northawada ,Tiruvalangadu ,Bali ,
× RELATED சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும்...