- கோயம்பேடு பேருந்து நிலையம்
- அன்புமணி
- அண்ணாநகர்
- Bhamaka
- ஜனாதிபதி
- அரும்பகோரி, சென்னை அரும்பகா
- கோயம்பெட்
- கோம்பெட்
- கிரீன் பார்க் 10 லட்சம் கையொப்பமிட
அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைத்தை பசுமை பூங்காவாக மாற்றக்கோரி, சென்னை அரும்பாக்கத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது 30 லட்சம் மக்களின் கோரிக்கை. சென்னையில் அதிக பூங்காக்கள் வேண்டும். 30 ஆண்டில் சென்னையின் பசுமைப் பரப்பு, பொதுவெளி 50 விழுக்காடு குறைந்துவிட்டது. கோயம்பேடு ஏரியை மூடிவிட்டுத்தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை உருவாக்கினர். 60 ஏக்கரில் கோயம்பேடு பசுமைப் பூங்கா வேண்டும். சென்னையில் சராசரி மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சுதந்திர தினத்தன்று கோயம்பேடு பூங்கா குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கு கருணாநிதி பெயரை முதல்வர் வைத்துக்கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோயம்பேடு பேருந்து நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்றக்கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கம்: அன்புமணி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.