×

ஒடிசா அரசு மருத்துவமனையில் 2 பெண் நோயாளிகளை பலாத்காரம் செய்த டாக்டர்: தர்ம அடி தந்த உறவினர்கள்

கட்டாக்: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த பெண்களை மருத்துவர் கற்பழித்த அவலம் தற்போது வௌிச்சத்துக்கு வந்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஸ்ரீராம் சந்திர பஞ்சா(எஸ்சிபி) மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி தன் தாயார் மற்றும் அத்தையை இதயநோய் சிகிச்சைக்காக கடந்த ஞாயிற்றுகிழமை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எக்கோகார்டியோகிராம் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவர் டில்பாசிங் தாக்கூர், இரண்டு பெண்களையும் தனித்தனியாக வரும் படி கூறியுள்ளார். பரிசோதனை முடிந்து வௌியே வந்த இரு பெண்களும் தங்கள் அடிவயிறு வலிப்பதாக கூறினர். இதனால் சந்தேகமடைந்த பெண்களின் உறவினர்கள் இருவரையும் அதே மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களையும் மருத்துவர் டில்பாசிங் தாக்கூர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு டில்பாசிங் தாக்கூரை சரமாரியாக தாக்கினர். டாக்டர் டில்பாசிங் தாக்கூரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post ஒடிசா அரசு மருத்துவமனையில் 2 பெண் நோயாளிகளை பலாத்காரம் செய்த டாக்டர்: தர்ம அடி தந்த உறவினர்கள் appeared first on Dinakaran.

Tags : Odisha ,government ,Dharma Adi Cuttack ,Kolkata, West Bengal ,
× RELATED ஒடிஷாவுக்கு எதிராக போராடி வென்றது சென்னையின் எப்சி