×

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘40/40 தென் திசையின் தீர்ப்பு’ வரலாற்று தேர்தல் ஆவண நூல் வெளியீடு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு பெறுகிறார்

சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ‘400 இடங்களை கைப்பற்றுவோம்’’ என்று சொன்ன பாஜவை தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியது இந்தியா கூட்டணி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை, அண்ணல் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன சட்டப் புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி.

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. அந்த சரித்திர சாதனையை ஆவணமாக பதிவு செய்கிறது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம். இந்நூலினை சென்னை, கலைஞர் அரங்கில் வரும் 16ம்தேதி வெள்ளிக்கிழமை, காலை நடைபெற உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., பெற்றுக் கொள்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படிச் சாத்தியமாக்கியது?, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023ல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏவில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதி பங்கீடு, திமுக தேர்தல் அறிக்கை, திமுக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், ஊடகங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டிகள், திமுகவின் தேர்தல் விளம்பரங்கள், 40/40 வெற்றியை தந்த தேர்தல் முடிவுகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள், ஏராளமான படங்கள், இன்போகிராபிக் என விரிவாகப் பதிவு செய்திருக்கிறது ‘தென் திசையின் தீர்ப்பு’ நூல். 40/40 வரலாற்றுச் சாதனை போல இந்த புத்தகமும் ஓர் வரலாற்றுத் தேர்தல் ஆவணம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘40/40 தென் திசையின் தீர்ப்பு’ வரலாற்று தேர்தல் ஆவண நூல் வெளியீடு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு பெறுகிறார் appeared first on Dinakaran.

Tags : M.U. K. ,Stalin ,Dhumaka District Secretaries ,Duraimurugan ,Meeting ,Dimuka District Secretaries ,R. Balu ,Chennai ,India-Coalition ,Dimuka ,Meeting of Dimuka District Secretaries ,
× RELATED பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன்...