×

நாய் கடித்ததில் ரேபீஸ் தாக்கி 5 வயது சிறுவன் பலி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. கார் டிரைவர். இவரது 5 வயது மகன் நிர்மல்ராஜ் (5), வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் கடந்த ஜூன் 27ம் தேதி மாலை விளையாடி கொண்டிருந்தான். அப்போது தெருநாய் திடீரென சிறுவன் மீது பாய்ந்து முகம், வாய், கை, கால் என அனைத்து பகுதிகளிலும் கடித்து குதறியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுவன் உயிரிழந்தான். நாய் கடித்ததில் ரேபீஸ் தாக்கி உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுவன் உடலை பேக்கிங் செய்து, பாதுகாப்பாக கணபதிபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

The post நாய் கடித்ததில் ரேபீஸ் தாக்கி 5 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Balaji ,Ganapathipuram ,Ranipet district ,Nirmalraj ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...