×

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

பாங்காங், ஆக.15: தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது பிக்சிட் சியூன்பான் என்பவருக்கு பிரதமர் ஷெரத்தா அமைச்சரவை பதவியை வழங்கினார். அமைச்சராக பொறுப்பேற்ற பிக்சிட், கடந்த 2008ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தக்சின் தொடர்பான வழக்கில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிக்சிட்டின் கடந்த காலம் குறித்து நன்கு தெரிந்தும் பிரதமர் ஷெரத்தா அவரை அமைச்சராக்கிய ஷெரத்தாவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

The post தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Thai ,Bangkok ,Shraddha ,Bixit Seonpan ,Thailand ,Bixit ,Thaksin ,Dinakaran ,
× RELATED Dating செல்ல விடுப்பு தரும் நிறுவனம்!