இங்கிலாந்து கவுன்டி கிளப் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக ஒப்பந்தமாகி உள்ள இந்திய சுழல் நட்சத்திரம் யஜ்வேந்திர சாஹல், நடப்பு சீசனில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். கேன்டர்பரி, செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஒன்-டே கோப்பை எ பிரிவு லீக் ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷயர் – கென்ட் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த கென்டி அணி சாஹல் சுழலை சமாளிக்க முடியாமல் 35.1 ஓவரில் 82 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜேடன் டென்லி 22, பார்கின்சன் 17*, ஏகான்ஷ் சிங் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
நார்தாம்ப்டன் பந்துவீச்சில் சாஹல் 10 ஓவரில் 5 மெய்டன் உள்பட 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய நார்தாம்ப்டன்ஷயர் 14 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பிரித்திவ் ஷா 17 ரன் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் சேல்ஸ் 33 ரன், ஜார்ஜ் பார்லெட் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடந்த சீசனில் சாஹல் கென்ட் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
The post சாஹல் சுழலில் சரிந்தது கென்ட் appeared first on Dinakaran.