×

விலைவாசி உயர்வு, ஊழல் புகார் எதிரொலி; ஜப்பான் பிரதமர் கிஷிடா பதவி விலக முடிவு

டோக்கியோ: ஜப்பான் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா கடந்த 2021 அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்றார். ஜப்பானில் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் கிஷிடாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்வி, கிஷிடாவின் செல்வாக்கை பெருமளவு குறைத்து விட்டது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் கிஷிடாவுக்கு சாதகமாக இல்லை. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் கிஷிடாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

புமியோ கிஷிடா வௌியிட்ட அறிக்கையில், “ கட்சி தலைவர் பதவியை மீண்டும் எதிர்பார்க்கவில்லை. கட்சி தலைவர், பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், கட்சிக்கும், புதிய தலைவருக்கும் ஆதரவாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

The post விலைவாசி உயர்வு, ஊழல் புகார் எதிரொலி; ஜப்பான் பிரதமர் கிஷிடா பதவி விலக முடிவு appeared first on Dinakaran.

Tags : Prime Minister Kishida ,Tokyo ,Bumio Kishida ,Liberal Democratic Party ,Japan ,Kishida ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...