×

சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்

வேலூர்: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(47), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வேலூர் அடுத்த கணியம்பாடி கன்னிக்கோயில் பகுதியில் இடம் வாங்கி அதில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். அங்கு கடலூரை சேர்ந்த தர்(53) என்பவரை தொழிலாளியாக நியமித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னையை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேர் கணியம்பாடிக்கு வந்தனர். அவர்கள் காளிதாசிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து காளிதாசை காரில் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வேலூர் தாலுகா போலீசில் தர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காரில் கடத்தி சென்றவர்களை தேடினர். அதில் காளிதாசை புதுச்சேரியில் தங்க வைத்திருந்தது ெதரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக காளிதாசை அவர்கள் 3 பேரும் கடத்திச்சென்று புதுச்சேரியில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக தலைமறைவான இப்ராகிம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vellore ,Kalidas ,Arumbakkam, Chennai ,Kanyambadi Kannikoil ,dar ,Cuddalore ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...