×

ஏடிஎம் அறையில் உள்ள ஏ.சி. மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் இந்திரா காந்தி நகர், பேசின் சாலையைச் சேர்ந்தவர் 102 வயதான மல்லையா. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 45 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மகள் விஜயம்மாளுடன் தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் மல்லையா பணம் எடுக்கச் சென்றார்.

அப்போது அங்கிருந்த ஏசி இயந்திரத்தின் பேன் மீது கைவைத்ததால் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏடிஎம் அறையில் உள்ள ஏ.சி. மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Mallya ,Basin Road ,Indira Gandhi Nagar ,Tiruvottiyur ,BSNL ,Vijayammal ,
× RELATED காதலியுடன் போதையில் உலா போலீஸ்காரை தள்ளிவிட்டு தப்பியோடிய ரவுடி கைது