×

எழும்பூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை 4 நாட்களில் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை: எழும்பூர் பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் 4 நாட்களில் முழுமையாக முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ரவிச்சந்தரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, ரயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்தது. ரயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி என்கிற ஆய்வுகள் நடத்தப்பட்டு பணிகள் நடந்தது.

அதன்படி, எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மழைநீரை கெண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் தொடங்கி நடந்தன. இந்நிலையில் எழும்பூர் அரசு நுண்கலை கல்லூரின் பின்புறம் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அப்போது, முக்கியமான மழைநீர் இணைப்பானது ரயில்வேயால் சமீபத்தில் முடிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் இன்னும் 4 நாட்களில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post எழும்பூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை 4 நாட்களில் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Egmore ,Highways Department ,Chennai ,Chief Engineer ,Highways Ravichandaran ,Highway Department ,Dinakaran ,
× RELATED கருவேல முட்செடிகள் அகற்றும் பணி...