- 2,000
- மதுபாடல்
- சோனாய் கருப்பனசாமி
- குச்சனூர் கோயில் திருவிழா
- சின்னமனூர்
- Kuchanur
- தேனி மாவட்டம்
- 2,000 மதுபாடல்
- தின மலர்
சின்னமனூர்: குச்சனூரில் சோணை கருப்பண்ணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் படையலிடப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் 500 ஆண்டு பழமையான சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் விழாவை நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. மேலும், சனிக்கிழமைகளில் பக்தர்கள் சென்று வழிபடலாம் என உத்தரவிட்டது.
இதன்படி கடந்த 4 வார சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்நிலையில், கோயிலின் உபகோயிலான சோனை கருப்பண்ணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் வழங்கிய 47 ஆடுகள், 27 கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அசைவ விருந்து பறிமாறப்பட்டது. நள்ளிரவு வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post குச்சனூர் கோயில் விழாவில் சோணை கருப்பண்ணசாமிக்கு 2,000 மதுபாட்டில் படையல் appeared first on Dinakaran.