- ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதி
- காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீரின் தோடா
- ஷிவ்கர்-அசார்
- டோடா மாவட்டம்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- தோடா
- ஜம்மு மற்றும்
- தின மலர்
காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் ஷிவ்கர்க்-அஸார் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பயங்கரவாதிகளை அழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இன்று காலை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த மோதலில் நமது ராணுவத்தின் கேப்டன் தீபக் சிங், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
The post ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.