×

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமனம்

மும்பை: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட உள்ளார். அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளர்களாக கம்பீர், மோர்னே மோர்கல் ஒன்றாக பணியாற்றினர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு தனது ஓய்வை அறிவித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜூலை 9ம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துமோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட உள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளர்களாக கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Morne Morgan ,Mumbai ,Morne Morgal ,team ,Morne Morgel ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் புதிய...