மத்தியப் பிரதேசம்: பூண்டு காய்கறியா? இல்லை மசாலாப் பொருளா? என 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சுவையான வழக்கில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாம்பார் முதல் பிரியாணி வரை சமையலில் தவிர்க்க முடியாதது பூண்டு. காய்கறி கடைகளை போலவே மசாலா விற்பனையாகங்களிலும் பூண்டு விற்கப்படும். இந்நிலையில், கடந்த 2015ல் மத்திய பிரதேச விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மண்டி வாரியம் பூண்டை காய்கறியாக வகைப்படுத்தியது.
ஆனால் வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தை சுட்டிக்காட்டி பூண்டை மசாலா பொருளாக அம்மாநில வேளாண் துறை அறிவித்தது. இதனை எதிர்த்து பூண்டு கமிஷன் ஏஜெண்ட் சங்கம் இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பூண்டு காய்கறி தான் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர விவசாயிகளுக்கு அல்ல என கூறி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பூண்டு அழுக கூடியது என்பதால் அது காய்கறிதான் என தீர்ப்பளித்து இருக்கின்றன. அதே நேரம் மசாலா விற்பனையகங்களிலும் பூண்டை விற்க அனுமதித்துள்ளனர். இந்த தீர்ப்பால் இரு தரப்பும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. பூண்டை இருவகையில் விற்கலாம் என்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றன.
The post பூண்டு.. காய்கறியா? இல்லை மசாலாப் பொருளா?: ம.பி.உயர் நீதிமன்றத்தில் நடந்த சுவையான வழக்கு..!! appeared first on Dinakaran.