தேவையானவை:
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்,
புளி – கொட்டைப்பாக்கு அளவு,
உப்பு – திட்டமாக.
வறுத்தரைக்க:
மிளகு, – சீரகம், துவரம்பருப்பு, தனியா – தலா 1 ஸ்பூன்,
மிளகாய் – 2,
கண்டத்திப்பிலி – 4 குச்சி,
அரிசி திப்பிலி – 2.
தாளிக்க:
நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – ஏழெட்டு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பச்சைவாசனை போனதும் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு மேலும் தேவையான நீர் சேர்த்து 1 ெகாதிவிட்டு நுரைத்து வந்ததும் இறக்கி விடவும். அதிகம் கொதித்தால் கசந்துவிடும். பிறகு நெய்யில் தாளிக்கவும். கண்டத்திப்பிலி ரசம் மருத்துவ குணம் கொண்டது. உடல் வலி, சளிக்கு நல்லது.
The post கண்டத்திப்பிலி ரசம் appeared first on Dinakaran.