×

சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலம் விடப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலம் விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணங்களை சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் உதவி இயக்குநர் தயார் செய்ய வேண்டும். கனிமம் உள்ள வட்டம், கிராமத்தின் பெயர், சர்வே எண், என்ன வகையான கனிமம் உள்ளது உள்ளிட்ட தகவல் இடம்பெற வேண்டும். டெண்டர் விதிகளின்படி ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்பட்டு குத்தகை உரிமம் வழங்கப்படும்.

The post சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலம் விடப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Assistant Director ,Department ,of Mining and Geology ,Dinakaran ,
× RELATED யானைமலையில் உள்ள குவாரியை சுற்றி கம்பிவேலி – தமிழ்நாடு அரசு