120 ஆண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு விளையாட்டுத் தொடர் என்றால் அது ஒலிம்பிக்தான். இந்த தொடரில் கிரிக்கெட் 1900 ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடந்தது. அதில் இங்கிலாந்து தங்கப் பதக்கம் வென்றது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இருந்து கிரிக்கெட் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம் ஒலிம்பிக்கில் ஒரு போட்டி விளையாடப்பட வேண்டும் என்றால் அது குறைந்தது 75 நாடுகளில் விளையாடப்பட வேண்டும். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 10 நாடுகளில்தான் அது தீவிரமாக விளையாடப்பட்டு வந்தது.
ஆனால் டி 20 கிரிக்கெட் வரவுக்குப் பிறகு அமெரிக்காவில் கூட தற்போது கிரிக்கெட் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில்தான் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் டி.20 கிரிக்கெட் சேர்க்கப்படுகிறது.இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா, கோஹ்லி டி.20 உலக கோப்பையுடன் இருக்கும் படத்தை ஒலிம்பிக் இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறது. இதுபற்றிப் பேசியுள்ள ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி விராட் கோஹ்லியின் புகழ்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
The post கோஹ்லியால் 2028 ஒலிம்பிக்கில் டி.20 கிரிக்கெட் சேர்ப்பு appeared first on Dinakaran.