×

சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். ரயில், பேருந்துகளில் சென்றால் 2 நாட்கள் பயணத்திலேயே கழியும் என்பதால் ஒன்றரை மணி நேர பயணமான விமான பயணத்தை நாடுகின்றனர்

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் விமான டிக்கெட் கட்டணங்களும் இரு மடங்கு உயர்ந்துள்ளன. சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.4,301-ஆக இருந்த விமான கட்டணம் இன்றும் நாளையும் ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,063ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் கட்டணம் ரூ.11,716ஆக அதிகரித்துள்ளது.

சென்னை திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், சென்னை கோவை விமான கட்டணம் ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.

The post சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goa ,Salem ,Independence Day ,
× RELATED திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 21...