- தேவநாதன்
- புதுக்கோட்டை
- ஜனாதிபதி
- இந்திய மக்கள் கல்வி மேம்பாட்டுக் கழகம்
- அசோக் நகர் பொருளாதார குற்றங்கள் அலுவலகம்
- சென்னை
- மயிலாப்பூர்
- நிதி
புதுக்கோட்டை: ரூ.525 கோடி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தேவநாதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி வழக்கில் தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவநாதன் உட்பட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்ஃபிட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
The post ரூ.525 கோடி மோசடி வழக்கு: தேவநாதனிடம் 8 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.