×

வங்கதேசம், இங்கிலாந்து தொடர் அட்டவணையில் மாற்றம்!

மும்பை: வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. தரம்சாலாவில் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் போட்டி குவாலியருக்கு மாற்றம். மேலும் அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த முதல் போட்டி கொல்கத்தாவிலும், ஜன.25ல் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த 2ம் போட்டி சேப்பாக்கத்திலும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

The post வங்கதேசம், இங்கிலாந்து தொடர் அட்டவணையில் மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Bangladesh, UK Series ,Mumbai ,BCCI ,T20 series ,Bangladesh ,England ,Gwalior ,India ,Taramsala ,UK Series ,Dinakaran ,
× RELATED மாடியில் இருந்து குதித்து மலைகாவின்...