×

திருச்சி வையம்பட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருச்சி, ஆக.14: திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய கோட்டை ஊராட்சி கல்கொத்தனூர் அரசு பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹.32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுமானப் பணியினையும், பழைய கோட்டை ஊராட்சி இனாம் ரெட்டிபட்டியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹.32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுமானப் பணியினையும், பழைய கோட்டை ஓந்தாம்பட்டி கிராமத்தில் பொது நூலகங்கள் கட்டுவதற்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் ₹. 22 லட்சம் மதிப்பீட்டில் ஓந்தாம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற நூலக கட்டிடம் கட்டுமானப் பணியினையும், வையம்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ₹.12.15 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானத்தில் காத்திருப்போர் கூடம் சுற்றுச்சுவா் மற்றும் பேவா் பிளாக் அமைக்கும் பணியினையும், வையம்பட்டியில் ஆர்சிசி திட்டத்தின் கீழ் ₹.3.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் மராமத்து பணி நடைபெறுவதையும், வையம்பட்டி சந்தப்பேட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ₹.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹.11 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நோில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வையம்பம்பட்டியில் ஊராட்சியில் உள்ள இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சாியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் செயல்பாடுகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு பராமாிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், கீரனூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள், அங்கு பராமாிக்கப்பட்டு வரும் மருந்து பொருட்களின் இருப்பு மற்றும் பணியாளா்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளையும், நடுப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு மற்றும் அங்கு பராமாிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடா்ந்து, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கல்கொத்தனூர் நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்தும் ஆய்வு செய்தார். நிகழ்வுகளில், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குப்தா வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், ஊராட்சி மன்றத்தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

The post திருச்சி வையம்பட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Trichy Vayambatti ,Tiruchi ,Kalkothanur Government School ,Old Fort ,Panchayat ,Kalkothanur District ,Vayambatti Panchayat Union ,Tiruchi District ,
× RELATED தாயுடன் கள்ளக்காதலை கைவிடாத ரவுடி தலை...