×

சிறுபாண்மை, பிற்பட்டோருக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் 27 முதல் நடக்கிறது

தஞ்சாவூர், ஆக.14: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பலவேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம். கல்வி கடன் திட்டம், ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் பின்வரும் தேதிகளில் தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. 27.08.2024 அன்று தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும், 28.08.2024 அன்று கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், 29.08.2024 அன்று பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கியிலும் நடைபெறவுள்ளது.

மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள், தகுதியுடையவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் மனுதாராரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று. குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக்கட்டணங்கள் செலுத்திய இரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையுமாறு கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

The post சிறுபாண்மை, பிற்பட்டோருக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் 27 முதல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu Minority Economic Development Corporation ,TOMCO ,Tamil Nadu Backward Economic Development Corporation ,DAPSETCO ,Tamil Nadu ,Tapsetco ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் கூட்டுப் பாலியல்...