×

காஸ் ஏற்றி வந்த குட்டியானை டயர் வெடித்து விபத்து: சாலையில் சிதறிய சிலிண்டர்கள்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அருகே காஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த குட்டியானை வாகனத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால், சிலிண்டர்கள் சாலையில் சிதறியதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் காஸ் சிலிண்டர் ஏற்றி குட்டியானை வாகனம் அதிக பாரம் தாங்காமல் டயர் வெடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குட்டியானையில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர்களை அனைத்தும் சாலையில் சிதறின. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் உதவியுடன் சாலையில் இருந்து அகற்றினர். காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post காஸ் ஏற்றி வந்த குட்டியானை டயர் வெடித்து விபத்து: சாலையில் சிதறிய சிலிண்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Singaporumalco ,CHENGALPATTU DISTRICT ,TRICHI- ,CHENNAI HIGHWAY ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்