சேலம்: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காந்தி ஸ்ேடடியத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். நாடு முழுவதும் சுதந்திர விழா கொண்டாட்டம் நாளை நடக்கிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
பின்னர், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களைக் கௌரவித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்குகிறார். விழழவில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இயற்கை, மலைவளம், நாட்டுப்பற்று, செம்மொழி, இது எங்கள் பாரதம் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதனையடுத்து காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இன்று போலீசாரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.
The post மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காந்தி ஸ்ேடடியத்தில் சுதந்திர தினவிழா appeared first on Dinakaran.