- சுதந்திர தினம்
- கிராமம்
- ஊட்டி
- நீலகிரி
- குன்னூர்
- கோத்தகிரி
- குடலூர்
- குடியரசு தினம்
- காந்திஜி
- தொழிலாளர் தினம்
- சுதந்திர தினம் கிராம சபா
- தின மலர்
ஊட்டி, ஆக.14: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகள் பிறந்தநாள், தொழிலாளர் தினம் ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். நாளை 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, சுதந்திர தினமான நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
The post 35 ஊராட்சிகளில் நாளை சுதந்திர தின கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.