×

10 நாட்களாக தூக்கில் தொங்கிய ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

 

பெ.நா.பாளையம், ஆக.14: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குப்பிச்சிபாளையத்தில் வசித்தவர் மன்சூர் சையது அலி (40). திருமணம் ஆகாதவர். தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருந்த வீடு பல நாட்களாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது மன்சூர் சையது அலி அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் இருந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 10 நாட்களாக தூக்கில் தொங்கிய ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Pena Palayam ,Mansoor Syed Ali ,Kuppichipalayam ,Periyanayakanpalayam, Coimbatore ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...