×

வினேஷ் மேல்முறையீடு தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஆக.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினேஷ் போகத் தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டு போட்டிகளுக்கான சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இரவு 9.30க்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், ஆக.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post வினேஷ் மேல்முறையீடு தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Vinesh ,Paris ,Vinesh Bhogat ,Olympic wrestling 50 kg ,final ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தனக்கு...