×

இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் ஏற்க முடியவில்லை: துணை ஜனாதிபதி தாக்கு

புதுடெல்லி: வீடு தோறும் தேசியக்கொடி பிரசாரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் தேசியக்கொடி பைக் பேரணிபேரணியை மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பாரத் மண்டபத்தில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஜெகதீப் தன்கர், நாட்டின் வளர்ச்சியின் வேகமானது அணுசக்தி வேகத்தில் இருக்கிறது. சிலரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியா இந்த வேகத்தில் முன்னேறினால் விஷ்வ குருவாக மாறிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். குடிமக்கள், இத்தகைய சக்திகள், தீய எண்ணம் கொண்டவர்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இவர்களின் நோக்கம் நாட்டை சீர்குலைப்பதாகும். அதனால் நமது முன்னேற்றம் தடைபடும். வீடுதோறும் தேசியக்கொடி பிரசாரம் நாட்டின் மீதான அர்ப்பணிப்பை காட்டுகின்றது” என்றார்.

The post இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் ஏற்க முடியவில்லை: துணை ஜனாதிபதி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Vice President Thaku ,New Delhi ,Rajya Sabha ,Deputy Speaker ,Jagdeep Dhankar ,National Flag bike ,Delhi ,National Flag ,Bharat ,Mandapam ,Jagadeep Thankar ,India ,Vice President ,Thakku ,
× RELATED நாடாளுமன்ற காங். பொருளாளராக விஜய்வசந்த் எம்பி நியமனம்