×

வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பாஜ மூத்த எம்பி நியமனம்

புதுடெல்லி: மக்களவையில் வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மக்களவை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ மூத்த எம்பி ஜெகதாம்பிகா பாலை சபாநாயகர் ஓம்பிர்லா நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 31 உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்களில் 21 பேர் மக்களவை எம்பிக்கள், 10 பேர் மாநிலங்களவை எம்பிக்கள் ஆவர். 73 வயதாகும் ஜெகதாம்பிகா பால், உபியில் இருந்து 4வது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். கூட்டுக்குழுவில் 21 மக்களவை உறுப்பினர்களில் பாஜவின் 8 பேர் உள்பட 12 பேர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 9 பேர். மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களில் 4 பேர் பாஜ, 4 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். ஒருவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மற்றொருவர் நியமன உறுப்பினர் ஆவார்.

The post வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பாஜ மூத்த எம்பி நியமனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Lok Sabha ,
× RELATED வெளிநாடுகளில் இப்படி பேசுவது...