திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் 15 நாள் ஆகிறது. நேற்றும் உடல்களைத் தேடும் பணி நடைபெற்றது. இதில் 2 உடல் பாகங்கள் கிடைத்தன. இதையடுத்து பலி எண்ணிக்கை 439ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் ஆற்றைக் கடப்பதற்காக ராணுவம் அமைத்திருந்த தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
The post வயநாடு நிலச்சரிவு பகுதியில் மீண்டும் பலத்த மழை appeared first on Dinakaran.