புதுடெல்லி: அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாகவும், அதேப்போன்று அதானி, செபி அமைப்பின் தொடர்புகள் மற்றும் செபி அமைப்பு ஆகியவை தொடர்பான விவகாரத்தை விசாரிக்காமல் இருப்பது ஆகியவை குறித்து அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் அவசர ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘இதற்கு முன்பாக அதானி விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை மீது செபி அமைப்பு விசாரணையை மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரைவிசாரணையை முடிக்காமல் செபி அமைப்பு இழுத்தடிப்பு செய்து வருகிறது.
அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போது அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை என்பது செபி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்பி உள்ளது. மேலும் இது நாடு தழுவிய ஒரு முக்கிய பிரச்சனை என்பதால் மனுவை உடனடியாக பட்டியலிட்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
The post ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.