×

எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க டீ கொடுத்து 2 பெண்களிடம் நகை கொள்ளை

அரக்கோணம்: கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (56), தமிழ்ச்செல்வி (44). உறவினர் இறுதி சடங்கிற்காக, சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்ற இருவரும், மும்பை-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் விருதாச்சலத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். அதே பெட்டியில் இருந்த 3 நபர்கள் பேசி பழகினர்.

சோலாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் மயக்க டீ கொடுத்துள்ளனர். அதை குடித்ததும் இருவரும் மயக்கம் அடைந்ததும் 5 பவுன் நகைகளை திருடி கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர். 15 மணி நேரத்திற்கு பிறகு லேசாக மயக்கம் தெளிந்த தமிழ்ச்செல்வி, நேற்று மாலை அரக்கோணம் வந்ததும் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க டீ கொடுத்து 2 பெண்களிடம் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Rohini ,Tamilchelvi ,Matianur ,Cuddalore district ,Mumbai ,Vrudhachalam ,Mumbai-Nagarkoil ,
× RELATED ரோகிணி கல்லூரியில் ரோட்டராக்ட் சங்க தொடக்க விழா