×

பேருந்து கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை: போக்குவரத்து துறை விளக்கம்

சென்னை: அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்து துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2018 ஆண்டு அதிமுக ஆட்சியில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அப்போது முதல் அரசு பேருந்து கட்டணம் என்பது உயர்த்தப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணம் மாற்றியமைப்பதற்காக ஆணையம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பேருந்து கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை: போக்குவரத்து துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Tamil Nadu ,Villupuram ,Kumbakonam ,Nellai.… ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை...