×

200 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி போதைப்பொருள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 51 வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சாவை, நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்க, ஆவடி போலீஸ் கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள, எரிவாயு எரியூட்டும் இயந்திரம் மூலம் 200 கிலோ கஞ்சா நேற்று எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

The post 200 கிலோ கஞ்சா அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Aavadi Police ,Commissioner ,Shankar ,Avadi Police ,Rajendran ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது...