×

100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெயர் பதிவு செய்து வேலை அட்டை வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு சிலருக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திருத்தணி-நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த கனகம்மாசத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

The post 100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : N.N.Kandigai Panchayat ,Tiruvallur District ,Tiruvalangadu Union ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு...