×

திருவண்ணாமலை சிறுமி உயிரிழப்பு எதிரொலி கும்மிடிப்பூண்டி குளிர்பானம் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கனிக்கிலுப்பை கிராமத்தில் நேற்று முன் தினம் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி காவ்யா ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குளிர்பானம் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குளிர்பானம் உற்பத்தி ஆலையிலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏலியம்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள மகேந்திரா சிட்டி வளாகத்தில் சிறுமி குடித்த குளிர்பானத்தின் கிளை குளிர்பான ஆலையில், நேற்று மாலை உணவு பாதுகாப்பு துறையின் திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொழிற்சாலையில் உள்ள சுகாதாரம் குறித்தும், குளிர்பான உற்பத்தி தொடர்பாகவும், மூலப் பொருட்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும் சிறுமி குடித்த குளிர்பானத்தின் தயாரிப்பு பேட்ச் எண் கொண்ட குளிர்பானங்கள் ஏதேனும் இந்த ஆலையின் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி ரவீன், குளிர்பான ஆலையில் இருந்து மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார். சிறுமி உயிரிழப்புக்கு குளிர்பானம்தான் காரணம் என்று உறுதியாகவில்லை. இந்த தொழிற்சாலையில் குளிர்பானத்தில் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் இங்குள்ள குளிர்பானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை சிறுமி உயிரிழப்பு எதிரொலி கும்மிடிப்பூண்டி குளிர்பானம் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Kummidipundi ,Kavya Sri ,Tiruvannamalai district ,Ganikilupam village ,drink ,
× RELATED தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை...