×

நீரில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 29.01.2022 அன்று கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து அவரது தந்தை ரவி என்பவருக்கும், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கலைஞர் தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர் 1.12.2021 அன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததை தொடர்ந்து அவருடைய தாயார் பத்மலதா என்பவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையினை கலெக்டர் த.பிரபு சங்கர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார். இதில் தனித்துணை கலெக்டர் (சபாதி) கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post நீரில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Mohan ,Azhinchivakkam village ,Ponneri district, Thiruvallur district ,Kosasthalai river ,Ravi ,Shyam Sundar ,Oothukottai ,Kalyan Street ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...