×

புழல் பகுதியில் புதிதாக 6 இடங்களில் டிரான்ஸ்பார்மர்: எம்எல்ஏ இயக்கி வைத்தார்

புழல்: புழல் பகுதியில் புதிதாக 6 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களை சுதர்சனம் எம்எல்ஏ இயக்கி வைத்தார். புழல் அடுத்த கதிர்வேடு ஜி ஸ்கொயர், சண்முகபுரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், அழிஞ்சிவாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் புதிதாக டிரான்ஸ்பார்மர் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஆவடி மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மேற்கண்ட 6 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று ஆவடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர், சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், உதவி பொறியாளர்கள் புழல் சதீஷ்குமார், கிரான்ட் லைன் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் தொகுதி எம்எல்ஏமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட 6 டிரான்ஸ்பார்மர்களை இயக்கி வைத்தார். விழாவில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் புழல் சரவணன், கவுன்சிலர்கள் புத்தகரம் ஏழுமலை, கதிர்வேடு சங்கீதா பாபு, அழிஞ்சிவாக்கம் சிவக்குமார், 31வது வட்ட திமுக பொறுப்பாளர் அன்பின் மகேஷ், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் பகுதியில் புதிதாக 6 இடங்களில் டிரான்ஸ்பார்மர்: எம்எல்ஏ இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,MLA ,Sudarshanam ,Kathirvedu G Square ,Shanmugapuram ,Surapatta ,Bharathidasan Nagar ,Azhinchivakkam Selva Vinayakar Kovil Street ,
× RELATED வேலூர் மத்திய சிறை கூடுதல்...