×

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.46 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருத்தணி: திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூர் பகுதியில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மோட்டார் வாகன பொறுப்பு ஆய்வாளராக ராஜராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ் செல்வி, மாலா ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1.46 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

The post மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.46 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Anti-Corruption Department police ,Thiruthani Motor Vehicle Inspector Office ,Tiruthani ,Chennai ,Tirupati National Highway Gunnathur ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டம்